பல்லடம் -உடுமலை சாலையில் அரசு, தனியார் பஸ்கள், ஸ்டாப்களில் நின்று செல்ல கோரிக்கை

பல்லடம் -உடுமலை சாலையில் அரசு, தனியார் பஸ்கள், ஸ்டாப்களில் நின்று செல்ல கோரிக்கை
X

Tirupur News- பல்லடம் பஸ் ஸ்டாண்ட் (கோப்பு படம்)

Tirupur News- பல்லடம் -உடுமலை சாலையில் செல்லும் தனியாா், அரசுப் பஸ்கள் பஸ் ஸ்டாப்களில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் -உடுமலை சாலையில் செல்லும் தனியாா், அரசுப் பஸ்கள் பஸ் ஸ்டாப்களில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்லடம் பகுதியை மையமாக கொண்டு முக்கிய நகரங்கள் காணப்படுகின்றன. திருப்பூர், தாராபுரம். உடுமலை, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்ல, முக்கிய மைய நகரமாக பல்லடம் அமைந்துள்ளது. இதில் உடுமலை, பொள்ளாச்சி செல்லும் வழித்தடங்கள் அனைத்துமே குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகு, கிராமப்புறங்களாக காணப்படுகின்றன. காற்றாலை அமைக்கப்பட்ட பகுதிகளாக, காடுகளாக, தோட்டங்களாக காணப்படுகின்றன. இடையிடையே சொற்ப எண்ணிக்கையில் மக்கள் வசிக்கும் கிராமங்களாகவும் உள்ளன. இங்கு போக்குவரத்து வசதி போதிய அளவில் இல்லாத நிலையில், மக்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களையே நம்பியுள்ளனர்.

அருகில் உள்ள நகரங்களுக்கு வந்து செல்லவும், பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவியர் சென்று வரவும், முக்கிய அலுவலகங்களில் பணிபுரிவோர் வந்து செல்லவும் பஸ்களையே நம்பியுள்ளனர். ஆனால் பல பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை என்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக பல்லடம் கிளை நிா்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

சில அரசு, தனியாா் பஸ்கள் சித்தம்பலம் பிரிவு, புள்ளியப்பம்பாளையம் பிரிவு, மந்திரிபாளையம், குள்ளம்பாளையம் , வாவிபாளையம், சின்னப்புத்துாா் உள்ளிட்ட கிராமங்களில் நிற்காமல் செல்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும், கொரோனா தொற்றுக்கு பின்பு வருவாயைக் காரணம் காட்டி அரசுப் பஸ்கள் குறைக்கப்பட்டு, பெரும்பாலான பஸ்கள் ஈரோடு, கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகின்றன. பஸ்களைக் குறைத்ததாலும், முறையாக ஸ்டாப்களில் அரசு, தனியாா் பஸ்கள் நிற்காமல் செல்வதாலும் அவதியடைந்து வருகிறோம்.

எனவே, பல்லடம் - உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், அரசு, தனியாா் பஸ்கள் நின்று செல்லவும் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!