மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3500 விலை நிா்ணயம் செய்ய கோரிக்கை
Tirupur News - மக்காச்சோளம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ.3500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்காச்சோளம் முக்கிய விளைபயிராக இருப்பதால், அந்த விவசாயிகள் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம், தாராபுரம். உடுமலை, வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் உற்பத்தி அதிகளவில் நடக்கிறது.
ஆனால் போதிய விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் ஏமாற்றமடைகின்றனர். அதனால் குவிண்டாலுக்கு ரூ. 3500 வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட குழு கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மதுசூதன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டில்லிபாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பேசினாா்.
இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பொழியாததால், பிஏபி பாசன நீா் முழுமையாக கிடைக்காமல் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் குவிண்டால் ஒன்று ரூ.2700-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.2100-க்கும் குறைவாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மாங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளா் குமாா், மாவட்டப் பொருளாளா் பலதண்டபாணி, மாவட்ட நிா்வாகிகள் பரமசிவம், கொளந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu