ரூ. 50 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

ரூ. 50 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
X

பல்லடத்தில் மீட்கப்பட்ட கோவில் நிலம்.

பல்லடம் அருகே, 50 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நாராயணபுரம் கிராமத்தில், அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 8.95 ஏக்கர் நிலம், மகாலட்சுமி நகர் அருகே உள்ளது. இந்த இடம் சிலரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

விசாரணையில், ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உட்பட வருவாய் துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு, 50 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!