செஞ்சேரிபுத்தூரில் ராமநவமி கோலாகலம்: பக்தர்கள் தரிசனம்

செஞ்சேரிபுத்தூரில் ராமநவமி கோலாகலம்:  பக்தர்கள் தரிசனம்
X

கோப்பு படம் 

பல்லடம் அருகே, செஞ்சேரிபுத்தூர் காரண வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.

பல்லடம் அருகே, செஞ்சேரிபுத்தூர் காரண வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. ராம நவமியை முன்னிட்டு, கோவை வெள்ளலூர் கீதா பஜனை குழுவினரின் பஜனை மற்றும் பிருந்தாவன நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ராம பஜனைக்கு ஏற்ப நாட்டியமாடி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

ராம காவியத்தின் சிறப்போடு ராமரின் மகிமைகளை உணர்த்தும் விதமாக கீதாபஜன் நடந்தது. சிறுவர், சிறுமியர் மற்றும் கிராம மக்கள் பலரும் பஜனையில் திரளாக பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீகாரண வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!