பல்லடம்; வடுகபாளையத்தில் அரசு பஸ்களை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை

பல்லடம்; வடுகபாளையத்தில் அரசு பஸ்களை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை
X

Tirupur News- போதிய பஸ் வசதி இல்லாத மக்கள், இதுபோன்று ஆபத்தாகவும் வாகனங்களில் பயணிப்பதும் அடிக்கடி நடக்கிறது. (கோப்பு படம்)

Tirupur News-பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்தில் அரசு பஸ்களை நிறுத்த, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்தில் அரசு பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா், பல்லடத்தில் இருந்து உடுமலை, பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் பஸ்கள் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் வழியாகத்தான் செல்கின்றன. ஆனால், இவ்வழியாக செல்லும் அரசுப் பஸ்கள் வடுகபாளையத்தில் நிற்பதில்லை.

இதனால், நகர பஸ்கள் மூலம் பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு சென்று ஏறவேண்டியுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிச் செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். போதிய பஸ் வசதி இல்லாத மக்கள், சரக்கு வாகனங்களில் ஆபத்தாக பயணிப்பதும் அடிக்கடி நடக்கிறது.

எனவே, திருப்பூா், பல்லடத்தில் இருந்து உடுமலை, பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் அரசுப் பஸ்களும், உடுமலை, பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு செல்லும் பஸ்களும் வடுகபாளையத்தில் நிறுத்திச் செல்ல அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திடீர் சாலைமறியல் முயற்சி; அதிகாரிகள் சமாதானம்

இதற்கிடையே, அரசுப் பஸ்களை வடுகபாளையத்தில் நிறுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று (சனிக்கிழமை) சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதுகுறித்து தகவல் அறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக பல்லடம் கிளை அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபடும் முயற்சியை அப்பகுதி மக்கள் கைவிட்டனா்.

பல்லடத்தை சுற்றி உடுமலை ரோடு, பொள்ளாச்சி ரோடு, கோவை ரோடு, திருப்பூர் ரோடு, மங்கலம் ரோடு பகுதிகளில் நிறைய கிராமப்புற குடியிருப்புகள் காணப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் சொற்ப எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. அதில் பல பஸ்கள் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களாக இருக்கின்றன. பல பஸ்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படம் நேர அட்டவணையும் கிடையாது. அதுமட்டுமின்றி இந்த வழித்தடங்களில் டவுன் பஸ்களின் இயக்கமும் குறைவாகவே உள்ளது. அதனால் பல நேரங்களில் பஸ் பயணம் என்பது மக்களுக்கு ஏமாற்றமே இருந்து வருகிறது.

முக்கிய வழித்தடங்களில் உள்ள கிராமப்புறங்களுக்கு அதிக எண்ணிக்கையில் குறிப்பாக நகர பஸ்களை இயக்க வேண்டும். அதிலும் காலை மற்றும் மாலை, இரவு வேளைகளில் இயக்குவது மிக முக்கியம். ஏனெனில் காலையில் வேலைக்கு செல்பவர்களும், இரவில் வீடு திரும்புபவர்களும் பஸ்களையே நம்பி இருப்பதாக, வடுகபாளையம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!