/* */

கல்குவாரிகளால் பிரச்சினை: சட்ட ரீதியாக அணுக முடிவு

கல் குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கல்குவாரிகளால் பிரச்சினை: சட்ட ரீதியாக அணுக முடிவு
X

கல்குவாரி.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் ஈசன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சில கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, பூமலூர், 63 வேலம்பாளையம் பகுதிகளில் பெரும்பாலான கல் குவாரிகள், அரசு அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக ஆழமாக தோண்டப்படுவதால் அருகில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் காய்ந்து விட்டன. கற்துகள்கள் காற்றில் பரவி சுற்றியுள்ள அனைத்து வீடுகளிலும் வெள்ளைதூள் படிந்து, சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல், ஒவ்வாமை நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னையை சட்ட ரீதியாக அணுகுவது என முடிவெடுக்கப்பட்டது.

Updated On: 29 Jan 2022 12:45 PM GMT

Related News