விலைவாசி உயர்வு: காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

விலைவாசி உயர்வு: காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
X

விலைவாசி உயர்வை கண்டித்து பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து, பல்லடத்தில், காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

பல்லடத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறப்பு பார்வையாளர் மணி, நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, கோஷங்கள் எழுப்பியபடி, செட்டிபாளையம் பிரிவிலிருந்து, திருச்சி ரோடு, என்.ஜி.ஆர்.ரோடு, மங்கலம் ரோடு வழியாக நடைபயணம் மேற்கொண்டனர். அதன்பிறகு, நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி செயல் தலைவர் மணிராஜ், மகிளா காங்., தலைவர் ஜானகி, பொங்கலுார் வட்டார தலைவர் தியாகு உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!