/* */

பல்லடம்: போராட்டத்தை வலுப்படுத்த விசைத்தறியாளர்கள் முடிவு

விசைத்தறி ஸ்டிரைக்கை வலுப்படுத்துவது என்று பல்லடம் பகுதி விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

பல்லடம்: போராட்டத்தை வலுப்படுத்த விசைத்தறியாளர்கள் முடிவு
X

கோப்பு படம் 

ஒப்பந்தம் செய்தபடி கூலியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல்லடம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த, 9ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டம் துவக்கியுள்ளனர். அவர்களுக்கு, ஆதரவாக விசைத்தறி தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம், பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டை அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினரும், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். விசைத்தறி வேலை நிறுத்தப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவது; தொழிற்சங்கங்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் இணைந்து, கிராமம் வாரியாக கூட்டம் நடத்துவது எனவும், கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதில், அவிநாசி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, மங்கலம் விசைத்தறி சங்க தலைவர் ஏ.பி.வேலுசாமி, தெக்கலுார் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட அனைத்து கட்சி பிரநிதிகள் பங்கேற்றனர்.

Updated On: 13 Jan 2022 7:45 AM GMT

Related News