விசைத்தறியாளர் பிரச்னை: தீர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

விசைத்தறியாளர் பிரச்னை: தீர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

விசைத்தறி வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தீர்வு கேட்டு, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறி வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தீர்வு கேட்டு, மா.கமயூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழாண்டாக ஒப்பந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்து, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையளர்கள், கடந்த, 9ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்லடத்தில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய செயலாளர் பரமசிவம், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், விசைத்தறி உரிமையார்கள் சங்க சி.ஐ.டி.யு., செயலாளர் முத்துசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோமனுார் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம், நன்றி கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business