விசைத்தறியாளர்களுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள்: தீர்வு காண அரசுக்கு கோரிக்கை
கோப்பு படம்
விசைத்தறியாளர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் பாலசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கந்தவேல் மற்றும் நிர்வாகிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு, அவர்கள் அளித்த மனு: விசைத்தறிக்கு தனி அமைச்சகம் வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின் திட்டத்தில், விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். விசைத்தறியாளர்கள் பெற்றுள்ள சுமார் 65 கோடி வங்கி மூலதன கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
விசைத்தறிக்கான தனிரக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஜவுளித்துறைக்கு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரத்திற்கு, நெட் மீட்டர் வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை உற்பத்திக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.
விசைத்தறியில் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். திமுக., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu