‘ஓவர்லோடு’ லாரிகளுக்கு அபராதம்; பல்லடம் போலீசார் நடவடிக்கை

‘ஓவர்லோடு’ லாரிகளுக்கு அபராதம்; பல்லடம் போலீசார் நடவடிக்கை
X

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில், ‘ஓவர்லோடு’ லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்ததை அடுத்து, போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே கோடாங்கிபாளையம், காளிவேலம் பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அங்கு இருந்து கேரளாவிற்கு அதிகளவில் எம்- சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பொதுமக்களின் இந்த புகார்கள் குறித்து அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்காததால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் நேரடியாக களத்தில் இறங்கி அதிகளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதே நிலை நீடித்தால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம் எனவும் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் சில நாட்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாரிகள், பல்லடம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கல்குவாரிகளுக்கு வராமல் இருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோடாங்கிபாளையத்தில் அதிக அளவில் எம். சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த 6 லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் சிறைப்பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட லாரியில் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரிகளுக்கு ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும், பல்லடம் பகுதியில் பிரதான சாலைகளில் இயக்கப்படும் வாகனங்கள் பெரும்பாலும், போக்குவரத்து விதிமீறல்களில் இயக்கப்படுகின்றன. ஓவர் லோடு, அதிக வேகம், ஒன்வே யில் பயணம், குடிபோதையில் வாகனம் இயக்கும் டிரைவர்கள் என, விதிமீறல்களால் அதிக விபத்துகள் நடக்கின்றன. எனவே, வீதிமீறல் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிப்பது மட்டுமின்றி அதிகமுறை விதிமீறும் வாகனங்களின் உரிமம் ரத்து, ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற கடும் நடவடிக்கைகளுக்கு அவசியம் என, பல்லடம் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் நெரிசலை குறைக்க, வாகன போக்குவரத்தை இன்னும் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!