ஒரே மேடையில் இரு கட்சிகள் இணைந்து மருத்துவ முகாமில் பங்கேற்பு

ஒரே மேடையில் இரு கட்சிகள் இணைந்து மருத்துவ முகாமில் பங்கேற்பு
X

 கரைபுதுாரில் நடந்த மருத்துவ முகாமில், அ.தி.மு.க., தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

கரைப்புதுார் ஊராட்சி அல்லாளபுரத்தில் நடந்த மருத்துவ முகாமில் திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கரைப்புதுார் ஊராட்சி அல்லாளபுரத்தில் தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார். பல்லடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆனந்தன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

இரு கட்சியை சேர்ந்தவர்களும் மேடையில் அமர்ந்திருந்தது, ஆரோக்கியமான அரசியலை வெளிப்படுத்தியது. இருதய சிகிச்சை, சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!