பல்லடம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணி தொடக்கம்

பல்லடம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணி தொடக்கம்
X

Tirupur News- பல்லடம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணி துவங்கியது (கோப்பு படம்)

Tirupur News- பல்லடம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது.

Tirupur News,Tirupur News Today- கோவை - கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையானது மைசூா், கூடலூா், உதகை, குன்னூா், மேட்டுப்பாளையம், கோவை, பல்லடம், காங்கயம், கரூா், திருச்சி வழியாக நாகப்பட்டினம் வரை முக்கியமான பகுதிகளை இணைக்கிறது. இச்சாலையில் வாகனப் போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. மேலும், இந்த சாலை குறுகலாக இருந்ததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, முதற்கட்டமாக பல்லடத்திலிருந்து காரணம்பேட்டை வரை சுமாா் 12 கி.மீ. தொலைவுக்கு ரூ.30 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், விபத்துகள் குறைந்துள்ளன.

இதேபோல, பல்லடம் - வெள்ளக்கோவில் வரையிலான 47 கி.மீ. தொலைவுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தற்போது 10 மீட்டா் அகலம் உள்ள இந்த சாலை 19.2 மீட்டராக அகலப்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.275 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இச்சாலையில் தேவையான இடங்களில் தரைமட்ட பாலங்களுடன், மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டு நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

2025-ம் ஆண்டுக்குள் சாலை விரிவாக்கப் பணி நிறைவடையும் எனவும், இதன் மூலம் வாகனப் போக்குவரத்து எளிதாவதுடன், விபத்துகள் குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!