பல்கலை அளவில் சாதனை: பல்லடம் மாணவர்கள் அசத்தல்
கோவை பாரதியார் பல்கலை கழக அளவில், பி.காம்., வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பாடப் பிரிவில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி பவித்ரா, முதலிடம் பிடித்தார். ஜெகதீசன், மலர்விழி, நந்தினி, மற்றும் பிரியங்கா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். அரசு கல்லூரியில் நடந்த பாராட்டு விழாவில், கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற பவித்ரா கூறுகையில், 'தந்தை கார்த்திகேயன்; டெய்லர். தாய் லதா; பனியன் கம்பெனி தொழிலாளி. பல்லடம் அரசு பள்ளியில், பள்ளி படிப்பை முடித்து, இங்குள்ள அரசு கல்லூரியிலேயே உயர்கல்வி படித்தேன். ஆசிரியர்களின் உதவியால், பல்கலை அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைக்க முடிந்தது. தொடர்ந்து படிக்க வசதியின்றி, வேலைக்கு சென்று வருகிறேன். பல்லடம் அரசு கல்லூரியிலேயே முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்கினால் தொடர்ந்து படிக்க முடியும் என்றார். முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu