பல்லடம் நகராட்சியில், 204 கடைகளுக்கு ரூ.1.45 கோடி வாடகை தள்ளுபடி

பல்லடம் நகராட்சியில், 204 கடைகளுக்கு ரூ.1.45 கோடி வாடகை தள்ளுபடி
X

Tirupur News,Tirupur News Today-பல்லடம் நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடம் நகராட்சியில் உள்ள 204 கடைகளுக்கு, ரூ. 1.45 கோடி வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- கொரேனா கால கட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் கடைகளை மூடிய 204 கடைக்காரா்களுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது, பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான அறிஞா் அண்ணா பஸ் ஸ்டாண்ட், தினசரி மாா்க்கெட், அண்ணா வணிக வளாகம் ஆகியவற்றில் மாத வாடகைக்கு கடைகளை எடுத்து நடத்தி வந்த 204 கடைக்காரா்கள் கொரோனா காலகட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் தங்களுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, முதல்வா் ஸ்டாலின் ஆகியோரிடம், இந்த பிரச்னை குறித்து எடுத்துக் கூறினாா். இதையடுத்து 2020 ம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் 2021 ம் ஆண்டு மே, ஜூன் என மொத்தம் 5 மாதங்களுக்கான வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன் மூலம் பல்லடம் நகராட்சியில், 204 கடைக்காரா்கள் தற்போது பயன் அடைகின்றனா். அவா்களுக்கு ரூ.1கோடி 45 லட்சத்து, 42ஆயிரத்து, 260 வாடகை தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இத்தொகையை பல்லடம் நகராட்சி நிா்வாகமே ஏற்றுக்கொள்கிறது, என்றாா்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!