பல்லடம் நகராட்சியில் போட்டியின்றி தி.மு.க. சுலபமாக வெற்றி

பல்லடம் நகராட்சியில் போட்டியின்றி தி.மு.க. சுலபமாக வெற்றி
X
பல்லடம் நகராட்சி தலைவர் பதவி போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணை தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 12 வார்டுகளில் வெற்றி பெற்றதன் மூலம் தி.மு.க., நகராட்சியை கைப்பற்றியது. நகராட்சி தலைவர் பதவிக்கு, 5வது வார்டு வேட்பாளர் கவிதாமணியை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.நகராட்சி கமிஷனர் விநாயகம், இதற்கான சான்றினை அவரிடம் வழங்கினார்.

பா.ஜ.க கவுன்சிலர்கள் ஈஸ்வரி, சசிரேகா ஆகியோர், தேர்தலை புறக்கணித்தனர். துணை தலைவர் தேர்தலில், தி.மு.க கூட்டணி சார்பில், ம.தி.மு.க கவுன்சிலர் நர்மதா மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!