திருப்பூர் மாவட்டத்தின் அதிக வாக்காளர்களைக்கொண்ட பெரிய தொகுதியானது பல்லடம்

திருப்பூர் மாவட்டத்தின் அதிக வாக்காளர்களைக்கொண்ட பெரிய தொகுதியானது பல்லடம்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் பெரிய சட்டசபை தொகுதியாக பல்லடம் மாறியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கேயம், அவிநாசி (தனி), பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, உடுமலைபேட்டை, மடத்துக்குளம் என எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில், 3,91,494 வாக்களர்களுடன் பல்லடம் பெரிய சட்டசபை தொகுதியாக உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 1,94,859 பேர், பெண் வாக்காளர்கள் 1,96,568 பேர், திருநங்கையர், 67 பேர் உள்ளனர்.

தொழில் வாய்ப்புக்காக, பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இடம்பெயர்வோர் அதிகரிப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture