பள்ளி வளாகம் சுத்தமானது 'அறம்' காத்த அறக்கட்டளை

பள்ளி வளாகம் சுத்தமானது அறம் காத்த அறக்கட்டளை
X

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுத்தம் செய்யப்பட்டது. பல்லடம் 'அறம்' அறக்கட்டளை சார்பில், மாணவர்கள் குழுவினர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள புல் பூண்டுகள், விஷச்செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டனர். அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், 'பள்ளி வளாகத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் வளர்த்து வருகிறோம். இதுதவிர, மூலிகை வனம் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படுள்ளதால், பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்த திட்டமிட்டோம். அந்த வகையில், அறக்கட்டளை நிர்வாகிகளுடன், மாணவர்களும் பங்கேற்று வளாகத்தை துாய்மைப்படுத்தினர்' என்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்