பல்லடம்: 58 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகுப்பு வழங்கல்

பல்லடம்: 58 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு  கொரோனா நிவாரணத்தொகுப்பு வழங்கல்
X
பல்லடம் தாலுகாவில், இதுவரை 58 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்லடம் தாலுகாவில் 75 ஆயிரத்து 302 அரிசி கார்டுதார்கள் உள்ளனர். கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள் கொண்ட நிவாரணத்தொகுப்பு, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த சில நாட்களாக பல்லடம் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகுப்பு மற்றும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, வட்ட வழங்கல் அதிகாரி தரப்பில் கூறுகையில், பல்லடம் தாலுகாவில் 75 ஆயிரத்து 302 அரிசி அட்டைதார்கள் உள்ளனர். அரசு அறிவித்து நிவாரண நிதி மற்றும் தொகுப்பு, இதுவரை மொத்தம் 62 ஆயிரம் பேருக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வந்ததில், 58 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தாலுகாவில் 12 ஆயிரம் பேருக்கு வழங்க வேண்டி உள்ளது. விரைவில் பொருட்கள் வந்தவுடன், இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும் என்றார்.

Tags

Next Story