சர்வதேச கபடி போட்டி; பல்லடம் மாணவன் தேர்வு

சர்வதேச கபடி போட்டி; பல்லடம் மாணவன் தேர்வு
X

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் சரத், தெற்காசிய கபடி போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் சரத், சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்க, தேர்வு பெற்றுள்ளார்.

பல்லடம் கே. என். புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். மில் தொழிலாளி. இவரது மகன் சரத் 20, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். 10 வயதில் இருந்தே கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சரத், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழக அணியில் உள்ள எட்டு வீரர்களில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவரும் ஒருவர். சரத், தற்போது சர்வதேச போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சரத், இதுவரை ஐந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சமீபத்தில் நேபாளத்தில் நடந்த சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்

மாணவர் சரத், அடுத்த மூன்று மாதங்களில் தாய்லாந்தில் நடக்க உள்ள தெற்காசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே இவரது விருப்பம்.

மில் தொழிலாளியின் மகனாக இருந்தும், தனது குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல், தன்னம்பிக்கையுடன் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறுகிறார். தன்னார்வலர்களின் உதவியால், இதுவரை சாதனைகளை புரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Next Story