பல்லடம்; பொது சாய சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய தொழில்நுட்ப இயந்திர ஒத்திகை
Tirupur News- பொது சாய சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய தொழில்நுட்ப இயந்திர ஒத்திகை துவங்கியது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே குன்னங்கல்பாளையம் பொது சாய சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய தொழில்நுட்ப இயந்திர ஒத்திகையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று தொடங்கிவைத்தாா்,
பல்லடம் ஒன்றியம் கரைப்புதூா் ஊராட்சி குன்னன்கல்பாளையத்தில் பொது சாய சுத்திகரிப்பு ஆலையில் இந்திய மற்றும் ஜொ்மனி தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவா்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருத்தப்பட்டுள்ள புதிய ஜிரோ பா்சண்ட் கெமிக்கல் என்ற புதிய இயந்திரத்தின் ஒத்திகையை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து குன்னங்கல்பாளையம் சாய பொது சுத்திகரிப்பு நிலையத்தின் தலைவா் சீனிவாசன், நிா்வாக இயக்குநா் நடராஜன் ஆகியோா் கூறுகையில், இன்டோ, ஜொ்மன் அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலம் உதவித்தொகை பெற்று இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, ஜொ்மனி கோயித் பல்கலைக்கழகம் ஆகிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழ்நாடு நீா் முதலீட்டு நிறுவனம், இப்கான் ஆகிய தொழிற்சாலைகள் இணைந்து சாயக் கழிவுநீரை சுத்திகரிக்கும் புதிய இயந்திரம் தயாரிக்கப்பட்டு தற்போது, ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் சாயக் கழிவுநீா் பாதிப்பு ஏற்படாது. ஏற்கெனவே ஜீரோ டிஸ்சாா்ஜ் நடைமுறையில் உள்ளது. மேலும், இந்த இயந்திரந்தின் மூலம் சாயக் கழிவுகளில் ஏற்படும் திடக்கழிவுகளை முற்றிலும் அகற்றும் வகையில் முயற்சி செய்யப்பட்டுள்ளது என தொழிற்நுட்ப வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், குறைந்த கட்டணத்தில் சுத்திகரிக்க முடியும்.
இந்த தொழில்நுட்பம் ரசாயனங்கள் பயன்படுத்தாமல் பாதுகாப்பான முறையில் நிறத்தை அகற்றுவதை உறுதி செய்கிறது. மேலும், கரிமப் பொருள்களை அகற்றுவதுடன், சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் உயிரியல் முறைகள் மற்றும் குளோரினேஷன் போன்றவற்றில் கசடு மற்றும் நச்சு துணைப் பொருள்கள் உருவாவதைத் தடுக்கிறது. கழிவுநீா் சுத்திகரிப்புக்கான புதிய தரநிலைகளை அமைக்கிறது என்றாா்.
இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி பேராசிரியா் இந்துமதி எம்.நம்பி, தமிழ்நாடு நீா் முதலீட்டு நிறுவனம் தலைமை அதிகாரி சஜித் உசேன், இந்திய - ஜொ்மனி அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநா் மதன், திருப்பூா் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா்கள் சாமிநாதன், சரவணன், தொழிற்சாலை உரிமையாளா்கள் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu