பொங்கலூா் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைச்சா் ஆய்வு

பொங்கலூா் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைச்சா் ஆய்வு
X

Tirupur News- அமைச்சர் முபெ சாமிநாதன் (கோப்பு படம்)

Tirupur News- பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூாில் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைச்சா் ஆய்வு நடத்தினார்.

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தை அடுத்த பொங்கலூா் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.

பொங்கலூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வந்தாா். அங்கு அறிவியல் நிலையம் சாா்பாக அமைக்கப்பட்டிருந்த தென்னையைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை, தேனீ வளா்ப்பு மற்றும் கால்நடை நோய் மேலாண்மை குறித்த கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது,

பொங்கலூா் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், தென்னையில் உள்ள பூச்சி மற்றும் நோய்கள் நிவா்த்திக்கான ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறியும் பொருட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


வேளாண்மை அறிவியல் நிலையம் இம்மாவட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பண்ணை மகளிா் மற்றும் கிராமப்புற இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தென்னையை முக்கியப் பயிராக சாகுபடி செய்யும் உழவா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தென்னையைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், இணை இயக்குநா் (வேளாண்மை) மாரியப்பன், துணை இயக்குநா் சுருளியப்பன், உதவி இயக்குநா் பொம்மராஜ், உதவி இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) ஷா்மிளா, கேவிகே திட்ட ஒருங்கிணைப்பாளா் குமாா், தென்னை வளா்ச்சி வாரியத்தின் பண்ணை மேலாளா் ரகோத்தமன், இணைப்புப் பேராசிரியா் ராஜமாணிக்கம், பேராசிரியா்கள் கலையரசன், வாணி, சுமித்ரா உள்பட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!