வியாபாரிகளின் கடை அடைப்பு அறிவிப்பு வாபஸ்

வியாபாரிகளின் கடை அடைப்பு அறிவிப்பு வாபஸ்
X

பைல் படம்.

பல்லடம் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், நீண்ட காலமாக இருந்து வரும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், பார்க்கிங் மற்றும் குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து, நாளை (16ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், நகராட்சி சார்பில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், வியாபாரிகள் கடையடைப்பு அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!