கற்போம் எழுதுவோம் திட்டம்: சிறந்த தன்னார்வலர்களுக்கு விருது

கற்போம் எழுதுவோம் திட்டம்: சிறந்த தன்னார்வலர்களுக்கு விருது
X

கற்போம் எழுதுவோம் திட்டத்தில் விருது பெற்ற தன்னார்வலர்கள்.

கற்போம் எழுதுவோம் திட்டத்தில் சிறந்த தன்னார்வலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கிராமங்களில், 15 வயதுக்கு மேல் படிப்பறிவு அற்றவர்களுக்கு எழுத்தறிவு ஏற்படுத்தும் நோக்கில், 'கற்போம் எழுதுவோம்' திட்டம் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து, கிராமப்பகுதிகளில் கல்வி, எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தனர். இத்திட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர் மற்றும் தன்னார்வலருக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடத்தப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பல்லடம், சுல்தான்பேட்டை ஒன்றியம், பூராண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி மற்றும் தன்னார்வலர் அனுசுயா ஆகியோரும் மாவட்ட அளவில் விருது பெற்றனர்.

வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் கூறுகையில், 'கற்போம் எழுதுவோம் திட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் தன்னார்வலர் அனுசுயா ஆகியோர், 63 பேருக்கு கல்வி கற்பித்ததுடன், சிறப்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், விருது வழங்கப்பட்டது,' என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!