கரடிவாவி நுாலகருக்கு சிறந்த நுாலகர் விருது
நல் நூலகர் விருது பெற்ற தனபாக்கியம்
தமிழகம் முழுவதும், மாவட்ட அளவில் சிறந்த நுாலகருக்கான விருது, ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக, விருதுகள் வழங்குவது தள்ளிப்போனது. பள்ளி கல்வித்துறை சார்பில், விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. இதில், மாநிலம் முழுவதும், 33 நுாலகர்கள் விருதுக்கு தேர்வாகினர்.
திருப்பூர் மாவட்ட அளவில், பல்லடம் அடுத்த கரடிவாவியை சேர்ந்த தனபாக்கியம், 43, சிறந்த கிளை நுாலகராக தேர்வு செய்யப்பட்டார். 'எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை' கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் வழங்கினர். விருது பெற்ற தனபாக்கியம், நுாலகத்திற்கு, 99 புரவலர்கள் மற்றும், 700க்கும் அதிகமான வாசகர்களை சேர்த்துள்ளார். விருது பெற்ற நுாலகரை பலரும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu