அடமான கடனுக்கான வட்டி தள்ளுபடி; திருப்பூரில் விசைத்தறியாளர்கள் வரவேற்பு

அடமான கடனுக்கான வட்டி தள்ளுபடி; திருப்பூரில் விசைத்தறியாளர்கள் வரவேற்பு
X

Tirupur News- அடமான கடனுக்கான வட்டி தள்ளுபடியை,  திருப்பூரில் விசைத்தறியாளர்கள் வரவேற்றுள்ளனர். (கோப்பு படம்)

Tirupur News- அடமான கடனுக்கான வட்டி தள்ளுபடி என்ற கூட்டுறவுத் துறை அறிவிப்புக்கு திருப்பூர் விசைத்தறியாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today - அடமான கடனுக்கான வட்டி தள்ளுபடி அறிவிப்புக்கு, கூட்டுறவுத் துறை அறிவிப்புக்கு விசைத்தறியாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அடமான கடனுக்கான வட்டி தள்ளுபடி அறிவிப்புக்கு விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்க செயலாளா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் சிறு வணிக கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட பண்ணை சாரா கடன்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 -ம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டத்தின்கீழ் 25 சதவீத தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்தி வங்கி அல்லது சங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் செய்து கொண்ட 6 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையின் இந்த அறிவிப்பால், அடமான கடன் வைத்துள்ள ஏராளமான விசைத்தறி உரிமையாளா்கள் பயன்பெறுவா். இதன் மூலம் நீண்ட நாள் கடன்களுக்குத் தீா்வு காண்பதுடன், விசைத்தறி தொழிலை மேம்படுத்தவும் வழி கிடைக்கும் என்றாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!