இயங்காத விசைத்தறிகள்: நுால் விலை உயர்வு எதிரொலி
பைல் படம்.
பருத்தி-பஞ்சு விலை உயர்வை தொடர்ந்து, நுால் விலையும் அபரிமிதமாக உயர்ந்து வருவது, தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நுால் விலை உயர்வால், பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள், காடா துணி உற்பத்தியை குறைத்துள்ளனர். பாவு நுால் சப்ளை கட்டுக்குள் இருப்பதால், விசைத்தறிகள், பெயரளவுக்கு மட்டுமே இயங்கி வருகின்றன.
ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், 'நுால் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால், தொழிலை நடத்துவதா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அகமதாபாத், குஜராத், அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு துணிகள் அனுப்பப்படுகின்றன. வட மாநிலங்களில், மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, வியாபாரிகள் பலர் துணிகளை கொள்முதல் செய்வது குறைந்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான துணிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. துணி உற்பத்தி குறைந்ததன் காரணமாக, பெரும்பாலான விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. நுால் விலை குறைந்து, வடமாநிலங்களில் இயல்பு நிலை திரும்பினால் மட் டுமே, மீண்டும் உற்பத்தி நடைபெறும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu