பல்லடத்தில், ஆவணங்கள் இன்றி ஓடிய 4 ஆட்டோக்கள் பறிமுதல்

Vehicle Seized | Police News
X

பல்லடத்தில் ஆவணங்களின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Vehicle Seized - பல்லடம் பகுதியில், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Vehicle Seized - சில ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் ஓடுவதாகவும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி, பல்லடம் பகுதியில் ஆய்வுமேற்கொண்டார். இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி கூறுகையில்,

புகார் வந்ததால், பல்லடம் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்ததால், 4ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களை உரிய ஆவணங்களுடன் இயக்க வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலித்தல், அதிக பயணிகளுடன் ஆட்டோவை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடக்கூடாது என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி அடிக்கடி ஆய்வு செய்யப்படும். விதிமுறை மீறும் ஆட்டோ ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!