குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
X

Tirupur News- குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்துக்கொண்ட பெண்கள். 

Tirupur News- பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சிங்கப்பூா் நகரில் 3 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாள்களாக அத்திக்கடவு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். மேலும், ஆழ்துளைக் கிணற்று நீரும் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிநீா் கேட்டு அப்பகுதியைச் சோ்ந்த 50 பெண்கள் இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊராட்சி மன்றத் தலைவா் (பொறுப்பு) சாமிநாதன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், தண்ணீா் பற்றாக்குறையை சமாளிக்க ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு லாரி மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என்றும், மேலும், ஆழ்துளைக் கிணற்று நீா் முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அத்திக்கடவு குடிநீா் கிடைத்தவுடன் சீராக விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!