வேலை நிறுத்தத்தை தொடரும் விசைத்தறியாளர்கள்

வேலை நிறுத்தத்தை தொடரும் விசைத்தறியாளர்கள்
X

பைல் படம்.

சோமனுார், அவிநாசி, தெக்கலுார், புதுப்பாளையம், பெருமாநல்லுார் ஆகிய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்கின்றன.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஜன., 9 முதல் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சோமனுார் ரகத்துக்கு, 19 சதவீதமும், இதர ரகத்துக்கு, 15 சதவீதமும் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்து, பல்லடம், மங்கலம், கண்ணம்பாளையம், வேலம்பாளையம் பகுதி சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றன. இதையடுத்து, அப்பகுதிகளில், விசைத்தறிகள் இயங்க துவங்கியுள்ளன. சோமனுார், அவிநாசி, தெக்கலுார், புதுப்பாளையம், பெருமாநல்லுார் ஆகிய சங்கங்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தை தொடர்கின்றன.

Tags

Next Story