பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா
Tirupur News- மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புகழ்பெற்ற முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் நடந்துவரும் இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டிலும் இங்கு பக்தர்கள் விழாவின் தொடக்க நாள் அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த திங்களன்று விநாயகர் வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டினர்.தொடர்ந்து முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார்.கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினசரி காலை 8:30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5:30 மணி முதல் 7.30 மணி வரையிலும் யாகசாலை பூஜைகள் ,சுவாமிக்கு அபிஷேகம், தீப ஆராதனையும், தினசரி சான்றோர் பெருமக்களின் ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் 18 ம் தேதி காலை 8:30 மணிக்கு மண்டபார்சனையும் 96 வாசனை திரவியங்கள் கொண்டு முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மாலை 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்கார விழா கோவில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெற்று சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர், தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu