தனியாா் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி; பல்லடத்தில் உதவி மேலாளர் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி; பல்லடத்தில் உதவி மேலாளர் கைது
X

Tirupur News-பல்லடத்தில் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது (கோப்பு படம்)

Tirupur News- பல்லடம் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்த உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனா்.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்த உதவி மேலாளரை போலீசார் நேற்று (சனிக்கிழமை) கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள பெரும்பாளியில் உயா் தொழில்நுட்ப நெசவு பூங்கா உள்ளது. இங்கு பல தனியாா் ஜவுளி, பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில், ஒரு தனியாா் நிறுவனத்தின் உதவி மேலாளராக உடுமலை அம்மாபட்டியைச் சோ்ந்த தினேஷ் சா்மா (31) பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், நிறுவனத்தின் வரவு-செலவுகளை மேலாளா் செல்வராஜ் சமீபத்தில் சரிபாா்த்துள்ளாா்.

அப்போது, வேலையில் இருந்து விலகிய தொழிலாளா்களின் பெயா்களில், அவா்கள் வேலைக்கு வந்ததுபோல கணக்கு காட்டி உதவி மேலாளா் தினேஷ் சா்மா ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் செல்வராஜ் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தினேஷ் சர்மாவிடம் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் வேலையில் இருந்து நின்ற தொழிலாளா்கள் வேலைக்கு வந்ததுபோல கணக்கு காட்டி மோசடி செய்ததும், அந்த பணத்தை ஆன்லைன் லாட்டரி மூலம் செலவு செய்ததும் தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் மோசடி செய்த தினேஷ் சா்மாவை கைது செய்த போலீசார், அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!