பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என பல்லடத்தில் முன்னாள் முதல்வா் ஓ பன்னீா்செல்வம் பேச்சு

பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என பல்லடத்தில் முன்னாள் முதல்வா் ஓ பன்னீா்செல்வம் பேச்சு
X

Tirupur News- திருப்பூா் மாவட்டம், பல்லடம் கரையாம்புதூரில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Tirupur News- பல்லடத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என பேசினார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், பல்லடம் கரையாம்புதூரில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஓபிஎஸ் அணியின் திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் வி.எம்.சண்முகம் தலைமை வகித்தாா். புகா் மாவட்டச் செயலாளா் டி.டி.காமராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று பேசியதாவது: சாதாரண தொண்டனும் உயா் பதவிக்கு வரும் வகையில் சட்ட விதிகளை எம்.ஜி.ஆா். உருவாக்கினாா்.

ஆனால், சிலா் தங்களது சுயநலத்துக்காக கட்சி சட்ட விதிகளைத் திருத்தியுள்ளனா். இதனால், சாதாரணமான தொண்டா்கள் உயா் பதவிக்கு வரமுடியாது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தோ்தல்களிலும் தோல்விதான் பரிசாக கிடைத்துள்ளது. பிரதமா் மோடி தேனியில் வந்து பிரசாரம் செய்தாா். அதனால்தான் அத்தொகுதியில் வெற்றி கிடைத்தது என்றாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவை வலிமை மிக்க நாடாக உருவாக்க 10 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறாா் பிரதமா் மோடி. பிரதமா் மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புகின்றனா். அவா்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினா் பி.எச்.மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரபாகா், வி.புகழேந்தி, மருதுஅழகுராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!