பல்லடத்தில் சைசிங் மில்லில் தீ விபத்து

பல்லடத்தில் சைசிங் மில்லில் தீ விபத்து
X

பல்லடம், கரையாம்புதுாரில் உள்ள சைசிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

Fire Incident- பல்லடம் அருகே உள்ள சைசிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

Fire Incident- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதுார் உள்ளது. இங்குள்ள சக்தி நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில் உள்ளது. நேற்று மாலை, இந்த மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மில்லில் இருந்த பஞ்சு மூட்டைகள் மீது தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதில் ஏராளமான பஞ்சு மூட்டைகள், மற்றும் நூல் மூட்டைகள், எந்திரங்கள் ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. மேலும் தீப்பிடித்து எரிந்ததில் கட்டிடத்தின் மேற்கூரைகள் வெடித்து சிதறியது. அந்த பகுதி எங்கும் புகை மண்டலமாக மாறி காட்சியளித்தது.

தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. பல்லடம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்துகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்