சுல்தான்பேட்டை இந்தியன் வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

சுல்தான்பேட்டை இந்தியன் வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்
X

கடன் பத்திரத்தை திரும்ப வழங்கக்கோரி, சுல்தான்பேட்டையில், வங்கி கிளையை முற்றுகையிட்ட விவசாயிகள்.

அடமான பத்திரத்தை வழங்கக்கோரி, சுல்தான்பேட்டை இந்தியன் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சுல்தான்பேட்டை ஒன்றியம், நல்லுார்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 37; விசைத்தறி உரிமையாளர். கடந்த, 2014ம் ஆண்டு, தொழிலை விரிவுபடுத்த, இந்தியன் வங்கி கிளையில், 20 லட்சம் ரூபாய் அடமான கடன் பெற்றிருந்தார்.

கடனை திருப்பி செலுத்தாத சூழலில், வங்கி அறிவுறுத்தலின் பேரில், வாராக்கடன் முகாமில் பங்கேற்று, 8 லட்சம் ரூபாய் செலுத்தினார். இருப்பினும், வங்கியினர் அடமானமாக வைத்த பத்திரத்தை திருப்பி வழங்க வில்லை.

இதனை கண்டித்தும், பத்திரத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியும், சுல்தான்பேட்டை இந்தியன் வங்கி கிளையை விவசாயிகள், விசைத்தறியாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை, போலீசார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 'இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!