கைத்தறி ஆடையிலும் போலி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கைத்தறி ஆடையிலும் போலி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

பைல் படம்.

கைத்தறி ரகங்களில் போலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாரம்பரியம் மிக்க கைத்தறி ரகங்கள் என்று மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், கைத்தறிகளை போன்றே, போலியாக உற்பத்தி செய்யப்படும் ரகங்களால், மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும், கைத்தறி மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும். இதை தடுக்க வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரிகளும், கண்துடைப்புக்காக ஆய்வு மேற்கொள்கின்றனர். கைத்தறிகள் மூலம் வசூல் செய்யப்படும் சேலைகள், வேஷ்டி உள்ளிட்டவற்றில், கோ-ஆப்டெக்ஸ் பட்டாம்பூச்சி லோகோ கொண்ட அச்சிடப்பட்ட அட்டைகள் வைக்கப்பட்டு, விற்பனைக்கு செல்கின்றன.

இதேபோல் அட்டைகளை பயன்படுத்தியும், போலியான கைத்தறி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க, நெசவு செய்யும்போதே பட்டாம்பூச்சி லோகோவும் தனியாக தெரியும்படி, சேலையுடன் நெசவு செய்ய வேண்டும். மேலும், அமலாக்கத் துறை அதிகாரிகள், வெறும் கண்துடைப்புக்காக ஆய்வு மேற்கொள்ளாமல், போலி ரகங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பாரதிய மஸ்துார் சங்க கோவை மண்டல செயலாளர் நடராஜன், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.

Tags

Next Story