101 வயதில் கண்தானம்: பொதுமக்கள் நெகிழ்ச்சி

101 வயதில் கண்தானம்: பொதுமக்கள் நெகிழ்ச்சி
X

கண் தானம் செய்த பழனிச்சாமி. 

பல்லடத்தில், 101 வயது முதியவரின் கண், தானமாக பெறப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், கேத்தனுாரை சேர்ந்தவர் பழனிசாமி. 101 வயது முதியவர். கடந்த, 24ம் தேதி தனது வீட்டில் இயற்கை மரணமடைந்தார். தான் இறந்த பின், தன் கண்களை தானமாக வழங்க வேண்டும் என, தன் குடும்பத்தாரிடம் இவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இவரது நாச்சம்மாள், தனது, 88வது வயதில் காலமானார். அவரது கண்களும் தானமாக வழங்கப்பட்டன. அப்போதே, பழனிசாமியும், தான் இறந்த பின், தனது கண்களை தானமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார் என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!