பல்லடம் வனம் அமைப்பு சார்பில் நாளை 'வளம் நோக்கி' கருத்தரங்கு

பல்லடம் வனம் அமைப்பு சார்பில் நாளை வளம் நோக்கி கருத்தரங்கு
X

சித்தரிப்புபடம் 

பல்லடம் வனம் அமைப்பின் சார்பில் நாளை நடைபெறவுள்ள 'வளம் நோக்கி' கருத்தரங்கில், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

பல்லடம் வனம் அமைப்பின் சார்பில் 'வளம் நோக்கி' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, நாளை நடைபெற்றது. இதில், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் கூறியதாவது: 'வளம் நோக்கி...' எனும் தலைப்பில், 19ம் தேதி (நாளை) நடக்கவுள்ள கருத்தரங்கில், தேசத்தின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றுகிறார்.

சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், தெலங்கானா நீர்வள மேம்பாட்டு கழக தலைவர் பிரகாஷ்ராவ் மற்றும் மதுரை ஐகோர்ட் அரசு வழக்கறிஞர் குருசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாக்க முன்னெடுத்து செல்லும் இந்த கருத்தரங்கில், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!