பொங்கலூரில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

பொங்கலூரில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் துவக்கம்
X

Tirupur News- பொங்கலூரில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை, எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

Tirupur News- பொங்கலூரில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

Tirupur News,Tirupur News Today- பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ.2.21 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ் தொடங்கி வைத்தாா்.

பல்லடத்தை அடுத்த பொங்கலூா் ஒன்றியம் வே.கள்ளிப்பாளையம் ஊராட்சி, வலையபாளையத்தில் கோவை மக்களவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் சமுதாய நலக்கூடம், வலையபாளையம் முதல் ஜெயந்தி காலனி வரை ரூ.1.39 கோடியில் தாா் சாலை, எலவந்திவடுகபாளையம் முதல் ஒட்டா்பாளையம் வரை ரூ.32.52 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை மேம்பாடு ஆகியப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொங்கலூா் ஒன்றியக் குழு தலைவா் வழக்குரைஞா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய குழு துணைத் தலைவா் அபிராமி அசோகன் முன்னிலை வகித்தாா்.

மேற்கண்டப் பணிகளை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பொங்கலூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் பி.அசோகன், பல்லடம் ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி (மேற்கு), என்.சோமசுந்தரம் (கிழக்கு), பல்லடம் ஒன்றியக் குழு தலைவா் தேன்மொழி, வி.கள்ளிப்பாளையம் ஊராட்சித் தலைவா் சாந்தினி சம்பத்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!