'நமக்கு நாமே' திட்டத்தில் பூங்கா மேம்பாடு பணிகள் துவக்கம்

நமக்கு நாமே திட்டத்தில் பூங்கா மேம்பாடு பணிகள் துவக்கம்
X

பல்லடத்தில்  நமக்கு நாமே திட்டத்தில் பூங்கா பராமரிக்க தன்னார்வலர்கள், நகராட்சி ஆணையரிடம் காசோலை வழங்கினார் .

பல்லடத்தில், 'நமக்கு நாமே' திட்டத்தில் பூங்கா பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழக அரசின், 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலம், பூங்கா அபிவிருத்தி, விளையாட்டுத்திடல், உடற்பயிற்சிக்கூடம், தெருவிளக்கு அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, மரக்கன்றுகள் நடுதல், அரசு பள்ளி கல்லுாரி, மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கென, மொத்த மதிப்பீட்டில், தமிழக அரசின் சார்பில் இரண்டு பங்கு தொகையும், பொதுமக்கள், தன்னார்வலர்கள் சார்பில் ஒரு பங்கு தொகையும் பெறப்படும். இத்திட்டத்தின் கீழ், பல்லடம், ராயர்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 6.70 லட்சம் ரூபாயை, பல்லடம் முருகன் டெக்ஸ்டைல் உரிமையாளர் முருகேசன் ஏற்றுக்கொள்ள முன்வந்தார். இதற்கான காசோலையை, அவர் நகராட்சி ஆணயைர் வினாயகத்திடம் வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!