திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட வீரர்களுக்கு சான்றிதழ்

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட வீரர்களுக்கு சான்றிதழ்
X

ஏ.டி.எஸ்.பி., ஜான்சன் மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகளை வழங்கி பாராட்டினார். 

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள், பல்லடம் அடுத்த, அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் சமீபத்தில் நடந்தது

திருப்பூர் மாவட்டம் முழுவதும், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, சேடபாளையத்தில் நடந்தது.

மாவட்ட சிலம்பாட்ட கழகத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., ஜான்சன் மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மூத்த பயிற்சியாளர் மதிவாணன், பயிற்சியாளர்கள் சக்திவேல், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future education