மனிதன் சிட்டாய் பறக்க, பட்டாம்பூச்சி உதவுது!
'மனிதன் உயிர்வாழ உயிரினங்களே ஆதாரமாக உள்ளன' என, பட்டாம் பூச்சிகள் வகைப்படுத்தும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
பல்லடம் அருகே காரணம்பேட்டை சங்கோதிபாளையத்தில் உள்ள மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில், பட்டாம் பூச்சிகளை வகைப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தாவரவியல் ஆலோசகர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். பூங்கா ஒருங்கிணைப்பாளர் பூபதி வரவேற்று பேசினார். மாணவர்களுக்கு பட்டாம்பூச்சி குறித்த கையேடு வழங்கப்பட்டது.
கோவை இயற்கை, மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் தலைவர் பாவேந்தன் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:
உலகில், 18,000க்கும் அதிகமான பட்டாம்பூச்சிகளும், தமிழகத்தில், 370க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்களும் உள்ளன. பட்டாம் பூச்சிகள், மனிதனின் உணவு உற்பத்திக்கு பல்வேறு வகையில் உதவி புரிகின்றன. பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எண்ணற்ற உயிரினங்கள் மறைந்து வருகின்றன.
மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதில், உயிரினங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதர்கள் உயிர்வாழ உயிரினங்களே ஆதாரமாக உள்ளன என்பதை மறுக்க முடியாது இவ்வாறு அவர் பேசினார். பூங்காவில் உள்ள பட்டாம்பூச்சிகள், வண்டுகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் உள்ளிட்டவை குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu