பல்லடத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

பல்லடத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
X
பல்லடத்தில், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வக்கீல்கள் சங்கம் (பார் அசோசியேஷன்), 84 வக்கீல்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நடப்பாண்டு, நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நவ.,29ல் நடந்தது. வக்கீல்கள் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழுவும், ரவீந்திரன் தலைமையில் மற்றொரு குழுவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

பல்லடம் சப் கோர்ட் வளாகத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், தலைவராக வக்கீல் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவராக தனபாலன், செயலாளராக சக்திவேல், பொருளாளராக சக்திதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக மகேஷ், கீர்த்திவர்மன் அப்துல்ரகுமான் ஆகியோர் தேர்வாகினர். வெற்றி பெற்றவர்களுக்கு பிற வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!