இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பைல் படம்.

பல்லடத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பல்லடம், கணபதிபாளையத்தில், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கு தன்னார்வலர்களை ஊக்கப்படுத்த வேண்டி, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்லடம், வட்டார வள மையத்தின் சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் பள்ளியில் நடந்தது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்று, பேசினார். ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி தலைமை வகித்தார். பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி, அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டி முகாம் நடத்தப்பட்டது. கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தன்னார்வலர்கள் விஜய், தேவராஜ், ரேவதி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!