கரடிவாவியில் சிறு தானியங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம்
Tirupur News- சிறுதானியங்கள் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- பல்லடத்தை அடுத்த கரடிவாவி கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் சிறு தானியங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடந்தது.
முகாமுக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகா் அரசப்பன் தலைமை வகித்தாா். பல்லடம் வட்டார வேளாண் அலுவலா் அஜித், உதவி வேளாண் அலுவலா் ரஞ்சித், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் திட்ட அலுவலா் அரசப்பன் பேசியதாவது,
மனிதனின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை சிறுதானியங்களான, சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றிலேயே அதிகம் உள்ளன. ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களை நாம் அன்றாடம் உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும்.
இதன்படி, கோ 32 ஏனும் புதிய ரக சிறு தானியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை நடவு செய்து அதிக பயன்பெறலாம் என்றாா்.
தொடா்ந்து கோடை உழவு, விதை நோ்த்தி, உரப்பயன்பாடு, ஊட்டச்சத்து, நுண்ணுணூட்டசத்து, உயிரியல் பூச் சிக்கொல்லி ஆகியவற்றின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu