பல்லடம்; மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கல்

பல்லடம்; மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கல்
X

Tirupur News- பல்லடத்தில் நடந்த விழாவில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டது. (கோப்பு படம்)

Tirupur News- பல்லடத்தில் நடந்த விழாவில், மகளிர் உரிமைத் திட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கும் விழா நடந்தது.

Tirupur News,Tirupur News Today- மகளிர் உரிமை தொகை 2-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் விழா, ஏற்கனவே உரிமை தொகை பெற்றவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் விழா, பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்துக் கொண்டு 1,239 மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,

மகளிர் உரிமை வழங்கும் திட்டத்தின் கீழ் 604 மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கியதற்கான ஏ.டி.எம். கார்டு மற்றும் 635 மகளிருக்கு முதலமைச்சரின் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதம் ரூ.1000 அரசு கொடுத்திருக்கிறது என்று அலட்சியப்படுத்தாமல் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய குடும்பத்தினுடைய நன்மைக்கும் அதன் மூலமாக இந்த நாட்டினுடைய நன்மைக்கும் பயன்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி் ஜெய்பீம், ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி பவன்குமார் கிரியப்பனவர், பல்லடம் நகர்மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஜெய்சிங்சிவக்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings