அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டில் பயனாளிகள் அதிருப்தி

அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டில் பயனாளிகள் அதிருப்தி
X

பல்லடத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்பு.

பல்லடம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், ஏழு ஆண்டுக்கு பின் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

பல்லடம், அறிவொளி நகரில், வீட்டு வசதி வாரியம் மூலம், 2013– 14ல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. 17 பிளாக்குகள் கொண்ட இக்குடியிருப்பில், மொத்தம், 544 குடியிருப்புகள் உள்ளன. இதில், 256 குடியிருப்புகள், கடந்த, 2014ல் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எஞ்சிய, 288 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாமல், காலியாக இருந்தன.

ஏழாண்டு கடந்த நிலையில், குடியிருப்புகள் அனைத்தும், பாழடைந்த நிலையில் காணப்படுவதாக, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர். சமூக விரோதிகளால் குடியிருப்புகளில் உள்ள கதவு, ஜன்னல், தண்ணீர் குழாய்கள், டேங்க் உள்ளிட்ட பலவும் சேதப்படுத்தப்பட்டு, மாயமாகியுள்ளன. தற்போது, காலியாக உள்ள வீடுகள், பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன.

பயனாளிகள் கூறுகையில், 'அடுக்குமாடி குடியிருப்பில், 2014ம் ஆண்டைய அறிவிப்புப்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், பிற பயனாளிகளுக்கு, 58 ஆயிரம் ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு, 60 ஆயிரம் ரூபாய், மற்றவர்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை குறைப்பதுடன், குடியிருப்பை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story