பள்ளிகளில் கழிப்பிடம் கட்ட ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு; பல்லடம் நகர்மன்ற கூட்டத்தில் தகவல்
Tirupur News- பல்லடம் நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- பல்லடம் நகராட்சி மன்றக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்ற கூட்டரங்கில் நடந்தது.
இதில் ஆணையா் முத்துசாமி, பொறியாளா் சுகுமாா், சுகாதார அலுவலா் செந்தில்குமாா், நகரமைப்பு அலுவலா் ரவிசந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் வரதராஜன், சுகாதார ஆய்வாளா்கள் சங்கா், சத்திய சுந்தரராஜ், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, வருவாய் ஆய்வாளா் நந்தினி பாக்கியராஜ் மற்றும் கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் மொத்தம் 52 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
பல்லடம் நகராட்சிப் பகுதியில் உள்ள அண்ணா நகா், கொசவம்பாளையம், கல்லம்பாளையம், சேடபாளையம், பி.டி.ஓ. காலனி, ராயா்பாளையம், பல்லடம் கிழக்கு, பல்லடம் மேற்கு ஆகிய 8 நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தண்ணீா் வசதியுடன் ரூ.80 லட்சம் மதிப்பில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் நலன் கருதி நவீன கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளன.
தெரு நாய்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த அதனைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படும். பல்லடம்- மங்கலம் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே வாா்டு எண் 4-ல் ரூ.12.50 லட்சம் மதிப்பில் சிமென்ட் சிலேப் உடன் கூடிய மழைநீா் வடிகால் அமைத்து அதனை ஏற்கெனவே உள்ள கழிவுநீா் தொட்டியில் இணைத்து மின் மோட்டாா் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்தப்படவுள்ளது.
மேலும், வாா்டு எண் 11, பெரியாா் நகா் மற்றும் வாா்டு எண் 9, பட்டேல் வீதி பகுதியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டாா் பொருத்தப்படவுள்ளது. வாா்டு எண் 5-இல் உள்ள மகாலட்சுமிபுரம் பகுதியில் இருந்து எஸ்.கே.ஆா்.நகா், செந்தோட்டம் கிழக்கு பகுதி வரை ரூ.24 லட்சம் மதிப்பில் புதிதாக மழைநீா் வடிகால் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu