தமிழகம் முழுவதும் 7 வாரங்களுக்கு பிறகு, 8 லட்சம் விசைத்தறி கூடங்கள், இயங்க தொடங்கியது

தமிழகம் முழுவதும் 7 வாரங்களுக்கு பிறகு,   8 லட்சம் விசைத்தறி கூடங்கள், இயங்க தொடங்கியது
X

கோப்புபடம் விசைத்தறி கூடம்

தமிழகம் முழுவதும் 7 வாரங்களுக்கு பிறகு 8 லட்சம் விசைத்தறி கூடங்கள் இயங்க துவங்கியதால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 7 வாரங்களுக்கு பிறகு, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள், 200 க்கும் மேற்பட்ட சைசிங் மில்கள் இயங்க துவங்கி உள்ளது.

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் விசைத்தறி கூடங்கள் செயல்படுகிறது. இதில் மூன்றில் இரண்டு பங்குகள் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் கோவை ,திருப்பூர், ஈரோடு ,கரூர் ,சேலம், மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 7 வாரங்களாக விசைத்தறி கூடங்கள் இயங்காமல் இருந்தது. பல்வேறு தளர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விசைத்தறி கூடங்களும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால்,தமிழகம் முழுவதும் 8 லட்சம் விசைத்தறி கூடங்கள் இன்று முதல் இயங்க துவங்கி உள்ளது.

இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 7 வாரங்களாக விசைத்தறி கூடங்கள் இயக்கப்படவில்லை. இதனால், 10 லட்சம் தொழிலாளர்கள் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டனர்.

500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் முடங்கியது. பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து ,விசைத்தறி கூடங்களை இயக்கி வருகிறோம், என்றனர்.

பல்லடம் பகுதி சைசிங் மில் உரிமையாளர்கள் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டாரத்தில் 200 க்கும் மேற்பட்ட சைசிங் மில்கள் உள்ளன.

அவற்றில் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர்.ஒரு சைசிங் மில்லில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரம் கிலோ பாவு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.20 வீதம் அதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். பல்லடம் பகுதியில் 200 சைசிங் மில்களில் சராசரியாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 லட்சம் கிலோ பாவு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்தில் 60 கோடி மதிப்புள்ள பாவு நூல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

விசைத்தறிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டதால் பல்லடம் பகுதியில் உள்ள சைசிங் மில்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த ரூ.40 கோடி மதிப்பிலான பாவு நூல்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளன.

தற்போது மீண்டும் இயக்க துவங்கி உள்ளோம், என்றனர.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!