/* */

20 ஆண்டுக்குப்பின் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை

பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

20 ஆண்டுக்குப்பின் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை
X

பைல் படம்.

பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த, 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்ட ஒப்பந்த கூலி ஒரு சில ரகங்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த 10 கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையே, 20 ஆண்டுக்கு பின் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள், நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இருதரப்பினரும், தொழில் நிலை கருதி கைகோர்த்துள்ளனர்.

ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல் விலை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு, கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த இரு தரப்பி னரும் முன்வந்துள்ளனர். விரைவில், கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 31 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  5. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  6. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. திருவண்ணாமலை
    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு